Wednesday, July 7, 2010

Mathra Devi

ஆலமரத்து  அடியில் கேட்ட   கதைகள்  -11
காஷ்மீரத்து சன்யாசினி மாத்ரா தேவி அம்மையார்
சாந்திப்பிரியா

காஷ்மீரில் பல மகான்களும் சன்யாசிகளும்,  தெய்வப் பிறவிகளும் இருந்துள்ளனர். அறுநூறு ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் ஆன்மீகத்தில் சொர்க்க பூமியாகவே  இருந்துள்ளது. அந்த காலத்தில் லல்லேஸ்வரி என்ற மாபெரும் சன்யாசினி இருந்துள்ளார். அவர் பெரும் மக்களினால் வணங்கப்படும் தெய்வப் பிறவி.  அவருடைய போதனைகள் அற்புதமானவை. லல்லா என அன்புடன் அழைக்கப்பட்டவருக்கு அடுத்து வந்தவர் ரூப் பவானி   (அவரைப் பற்றி ஏற்கனவே முன்னர் எழுதி உள்ளேன் ), அவருக்கு அடுத்து வந்தவர் மாத்ரா தேவி.  மாத்ரா தேவி பதினேழு அல்லது பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவரைப் பற்றிக் கூற வேண்டும் எனில் அவர் லல்லா தேவியின் அவதாரம் என்றே  கூறலாம்  .
வீரனாக்  என்ற இடத்தில் இருந்த காஷ்மீரத்து பண்டிட்டான  ஹரி கவுல் என்பவருக்கு  மாத்ரா 1878 ஆம் ஆண்டில் பிறந்தவர்.  அவர் பிறந்த இடம் சுடுகாட்டுக்கு அருகில் இருந்ததாம்.  இளம் பருவத்தில் இருந்தே மாத்ரா வித்யாசமான குழந்தையாகவே வளர்ந்தார். ஆன்மீக நாட்டம் அதிகமே  இருந்தது.  அவளுக்கு பதினைந்து வயதானபோது பகவான் தாஸ் கவுல் என்பவருடன் திருமணம் ஆனாலும் மூன்றே வருடங்களில்  அவருடைய கணவர் மரணம் அடைந்தார். ஆகவே அவள் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டியதாயிற்று. அதுவே அவளுடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.  அங்கு சென்றவளுக்கு ஸ்ரீநகரை  சேர்ந்த பண்டிட் ஸ்ரீதர் என்பவர் குருவானார். அவர் அவளுக்கு ஆன்மீக போதனைகள் செய்தார்.  அதே நேரத்தில் மாத்ராவின் சகோதரரான கோவிந்தா கவுல் என்பவரும் ஆன்மீக நாட்டம்  கொண்டு அவளுடன் இருந்தார். 
ஆன்மீக போதனைகளைப் பெற்றவளுக்கு அவருடைய சகோதரர்  ஜீலம்    எனும் நதிக் கரைக்குப் பக்கத்தில் ஒரு குடிசையை அமைத்து அதன் கீழே பள்ளம் தோண்டி அவளுக்கு சாதனாக்களை செய்ய ஏற்பாடு செய்தார்.  அவள் அந்த பள்ளத்தில் அமர்ந்து கொண்டுதான் மூன்று வருடங்கள் கடுமையான  தபம் செய்தார். அவள் தெய்வீக சக்தி  பெற்றாள் . அவள் முகம் பிரகாசித்தது. தெய்வீகக் களைப் பெற்றது.  பல அற்புதங்களை  அவள் நடத்த மாத்ரா என்ற பெயர் மாத்ரா தேவி என ஆயிற்று. பெரும் திரளான மக்கள் அவளை நோக்கி வரலாயினர். பின்னர் அந்த இடமே அவள் ஆன்மீக போதனைகள் தந்த குடிலாயிட்று.
அதன் பக்கத்தில் ஒரு சிவன் ஆலயம் இருந்தது.  அங்கு அவள் போதனைகளை தரும் சொற்பொழிவுகள் ஆற்றத் துவங்கினாள்.  அவள் பெட்டரு இருந்த தெய்வத் தன்மையினால்  நிறைய பக்தர்கள் அவளிடம் அடைக்கலம் ஆயினர். 1940 -41 ஆம் ஆண்டில் அவள்  வீர்நாகில் இருந்து கிளம்பி  காஷ்மீரின் வடக்குப் பக்கத்தில் இருந்த காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு சென்று தம் பணியைத் தொடர்ந்தார்  . ஷாதிபூர்  என்ற இடத்தில் சில காலம் தங்கி இருந்தப்பின் ஸ்ரீனகருக்குத் திரும்பி அங்கு இருந்த சிவாலயத்தில் தங்கி  தன் பணியினைத் தொடர்ந்தார்.  அங்கு சுமார் நாற்பத்தி ஐந்து வருடங்கள் போதனைகள், சமூகப் பணிகளை தொடர்ந்தார்.  மெல்ல மெல்ல அவர் உருவமும் லல்லேச்வரி போலவே ஆயிற்று.  தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்தனர். அவள் இருந்த இடம் ஆசிரமம்  போல ஆயிற்று. அங்கிருந்து துர்கானந் என்ற பகுதிக்குச் சென்றார். அங்கு சில காலம் தங்கி இருந்து மக்களின்  அன்பைப்  பெற்றவரை அவருடைய சகோதரர்  மற்றும் ஸ்வாமிஜியுமான  பண்டிட் கோவிந்த கவுல் என்பவர்  1967 ஆம் ஆண்டு வீர்னாகிற்கே   அழைத்து வந்தார். அங்கு  தங்கிய மாத்ரா தேவி அடுத்த பதினேழு வருட காலம் மக்கள் சேவையில் இருந்து, ஆன்மீக போதனைகள் செய்தார் .   இறுதியில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்ஐந்தாம் தேதியன்று சமாதி அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு இந்துக்களும் முகமதியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். அவர் சமாதி வீர்னாக்கில் உள்ளது.
ed;wp: fl;Liuapd; MjhuKk; glq;fSk;:
fh\;kPu; gz;bl;Lf;fspd; mNrhrpNa\d; http://www.koausa.org

No comments:

Post a Comment