Monday, June 14, 2010

Navagraha Temples-- Guru

குரு ஆலயம்
ஆலயத்தின் பெயர்: இராமனாதீஸ்வரர்


சாந்திப்பிரியா
 

 
வழி : அடையார் - கிண்டி - செயின்ட் தாமஸ் மவுண்ட்-வழியே சென்று பூந்தமல்லி செல்லும் பாதையிலேயே (பெங்களூர் செல்லும் பாதை) சென்றால் போரூரை அடையலாம். போரூர் சாலையில் இடப்புறம் வரும் டுரூவு இன்போடெக், டி.எஸ்.ஆர்.பவுடர் கம்பனி , எஸ்எஸ்கியர்ஸ் மற்றும் இராமசந்திரா மெடிகல் காலேஜ் போன்ற கம்பனிகளைத் தாண்டிச் சென்றால் போரூர்-குன்றத்தூர் செல்லும் சாலை வரும். சாலை இருபுறமும் பிரியும் அந்த இடத்தை அடைந்ததும் இடப்புறம் திரும்பி போரூர்-குன்றத்தூர் செல்லும் சாலையின் செல்ல வேண்டும். அந்த சாலையின் இடது பக்கத்திலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் மெயின் சாலையிலேயே தெரியும் நாகரத்னம்மா ஆலயம் அருகிலும் மின்சார வாரிய காரியாலத்துக்கு முன்பேயும் குருவின் ஆலயத்துக்குச் செல்ல வளைவு (ARCH) உள்ளதைக் காணலாம்.

வரலாறு:- 
 
1000அல்லது 1200 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு உள்ள இந்த ஆலயம் குறித்து மிகவும் சுவாரஸ்யமான கதைகளை பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஒருமுறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே நடனப் போட்டி ஏற்பட்டது. அதில் பார்வதி தோற்று விடுகின்றாள். அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் போனவள் சிவனை பழி வாங்க தனது அண்ணனான மகா விஷ்ணுவின் உதவியை நாடுகிறாள். தான் ஒரு முறையாவது எதிலாவது சிவனை தோற்க அடித்து அவரை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காக தான் சிவனை அடக்கும் அவதாரம் எடுத்து அவரை அடக்கி மணந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள். ஆனால் நடந்த போட்டியில் நியாயமான முறையிலேயே சிவபெருமான் சக்தியை தோற்கடித்து இருந்ததினால் சிவனை விட்டுக் கொடுக்க விஷ்ணுவிற்கு மனம் வரவில்லை. அந்த நேரத்தில் கோபத்துடன் பார்வதி சிவனைத் தேடி அலைந்தாள். கோபத்துடன் அலைந்து திரிந்தவள் காஞ்சியை அடைய அவனுடைய கோபத்தினால் சிவபெருமானுக்கு ஒன்றும் நேரக்கூடாது என எண்ணி அந்த இடத்தில் முழுவதும் சிவலிங்க உருவாங்களாக காட்சி தர விஷ்ணு ஏற்பாடு செய்துவிட உண்மையான சிவபெருமானை பார்வதியினால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் கோபமுற்ற பார்வத விஷ்ணுவும் பூமியில் அவதரித்து தனது மனைவியை இழந்து தவிக்க வேண்டும் என சாபமிட்டாள். பார்வதியின் சாபம் பெற்றதினால் விஷ்ணுவும் இராமராகப் பிறந்து சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு சென்றப் பின் அவளைத் தேடி அலைந்து தற்போது குருவின் ஆலயம் உள்ள இடத்துக்கு வந்து சேருகின்றார். அது அப்போது அடர்ந்த காடாக இருந்தது. ஒரு நெல்லிமரத்தின் அடியில் வந்தபோது அவர் தன்னுடைய காலின் கீழ் சிவலிங்கம் இருந்ததை உணர்ந்தார். ஆகவே சிவனை நினைத்து ஒரு மண்டலம் அந்த இடத்திலேயே தவம் இருந்தார். அந்த நேரத்தில் ஒரே ஒரு நெல்லிக்காயை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டாராம். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் பூமியை பிளந்து கொண்டு இராமருக்கு விஸ்வடூப தரிசனம் தந்தாராம். இராமபிரானும் அவரை அங்கேயே வணங்கித் துதித்து பூஜைகள் செய்து தன் மனைவியின் இருப்பிடத்தை அறிந்து அங்கிருந்து சென்றாராம்.

ராமர் பாதம் 


நெல்லி மரத்தடியில் இராமன்
துதித்த சிவலிங்கம்

அவர் போகும் முன் சிவபெருமானை தன்னுடைய குருவாக வணங்கினார். குரு பகவான் தேவர்களுக்கு அதிபதி. அவரை அதனால் பிரஹஸ்பதி என்பார்கள். அவர் வேதங்களின் நாயகன். இராம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிற்கு குருவாக சிவபெருமான் ஆனதினாலும் இராமரின் தோஷத்தைப் போக்கியதினாலும் இனி அந்த இடத்தில் தம்மை வந்து வணங்கித் துதிப்பவர்களுக்கு நவக்கிரக குரு பகவானாக இனி தாம் இருப்பேன் என சிவபெருமான் கூற அந்த சிவலிங்கம் குருவின் அவதாரமாயிற்று. யுத்தம் முடிந்து திரும்ப வரும் பொழுது இராமன் சிவபெருமானை பூஜித்து வணங்கி தோஷத்தை களைந்து கொண்ட இராமேஸ்வரம் போன்ற யுத்தத்துக்கு முன் இராமரின் தோஷத்தை முதலில் விலக்கிய மகிமையை அந்த அற்புத இடம் பெற்றதினால் அந்த ஆலயம் இருந்த இடம் உத்தர இராமேஸ்வரம் என்றப் பெயரைப் பெற்றது.

அந்த புராணத்தை அறிந்து கொண்ட சோழ மன்னர்கள்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிவலிங்கம் தானாகத் தோன்றி அந்த இடத்திலேயே குருபகவானாகக் காட்சி தந்து இரட்ஷித்த சிவலிங்கத்தை குரு பகவானின் ஆலயமாக அமைத்தனர். அந்த ஆலயத்தில் ஸ்தல விருஷ்ஷமாக நெல்லி மரம் உள்ளது. அதன் அடியில் வேம்பு அரசமரத்தடிப் பிள்ளையார் மற்றும் சிவலிங்கமும் இராமரின் பாதமும் காணப்படுகின்றன. மரத்தில் பிரும்மாவும் உள்ளார். குரு கிழக்கு திசைப் பார்த்தபடி இருக்க அந்த சன்னதியின் வெளியில் உள்ள சன்னதியில் பார்வதி தேவி சிவகாம சுந்தரி என்ற பெயரில் தெற்கு நோக்கி அமர்ந்து உள்ளார். ஆலயத்தினை சுற்றி; வலப்புறம் வினாயகர், இடப்புறம் முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரகங்கள் போன்றவர்களுக்கும் சன்னதிகள் உள்ளன.
 
ஆலயத்தின் விஷேசம் என்ன எனில் இங்கு சிவனும் விஷ்ணுவும் ஒன்று இணைந்து இருந்ததினால் சிவன் ஆலயங்களில் வீபுதி கொடுப்பது போல வீபுதியும் விஷ்ணு ஆலயங்களில் தருவதைப் போல தீர்த்தமும் தந்து சடாரியையும் வைக்கின்றனர். தெற்கு நோக்கி உள்ளது. அம்பிகைக்கு அதிக முக்கியத்துவம். தேவுவுறை நாயகி என்றும் பெயர் உண்டு.

No comments:

Post a Comment